Wednesday, November 9, 2016

பழைமையான சுவர் ஓவியம் அமைந்த இடங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் உள்ள திருநந்திக்கரை குகைக் கோயில் ஆகும். இக்கோயில் பல்லவர் கால குகைக் கோயில் ஆகும். கி.பி.6-7 ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் சமணர்களுக்காக நிறுவப்பட்டு இந்து கோயிலாக இராஜ ராஜ சோழனால்மாறியது. குகையின் மண்டபம் மிகுதியாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்டிருந்ததாக கணிப்பு உள்ளது.இருப்பினும், தற்போது மங்கிய நிலையில் உள்ளது. இந்த சுதை ஓவியங்கள் கி.பி 9-10ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியங்களாகும்.இந்த ஓவியங்கள் காவியக் கதைகளான இராமயணம், மகாபாரதம் போன்ற புராண கதைக்காட்சிகளை சித்தரிக்கின்றன. இங்குள்ள கபோதர்தில் உள்ள மாதேவர் ஓவியம்தான் சேரர் கால ஓவியங்களில் கிடைத்த ஓரே சான்று. சிகப்பு,ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம்,கருப்பு போன்ற நிறங்கள் சுவர் ஓவியங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.பிரதானமாக அந்தியைப் போன்ற பொன் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது. இந்நிறங்கள் இயற்கையான முறையில் பூக்களிலிருந்தும், தாவர எண்ணெயிலிருந்தும் தயாரிக்கப்பட்டன. தற்போது மங்கிய நிலையில் காணப்படும் இக்கோயில் பாதுகாப்பது நமது கடமையாகும்.